தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமேசான், பிளிப்காட் போன்ற ஒரு ஆன்லைனில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.
இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது என்பதை பார்த்தோம்.
இதனையடுத்து “சின்ன சின்ன மளிகை கடைகளை அழிக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு விஜய்சேதுபதி துணை போவதாக கூறி விஜய்சேதுபதியின் அலுலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இன்று நவம்பர் 5 காலை சென்னை, ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரவைகளை சேர்ந்த 200 பேர் சாலையில் பேரணியாக சென்றனர்.
அவர்கள் பதாகைகளுடன் விஜய் சேதுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.
Protest against Vijay Sethupathi for Online Business Advt