BREAKING பப்ஜி கட் கட் பைடு உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை

BREAKING பப்ஜி கட் கட் பைடு உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pubgடிக்டாக், ஷேர் சாட், ஹலோ ஆப் உள்ளிட்ட 54 செயலிகளுக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு தடைவிதித்தது என்பதை நாம் அறிவோம்.

அதுபோல் பப்ஜி வீடியோ கேம் குறித்தும் அடிக்கடி புகார்கள் எழுந்தன.

பப்ஜி விளையாட்டுவதால் இளைஞர்கள் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பப்ஜி மொபைல் கேம், கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளை தடை விதித்து மத்திய அரசு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை உத்தரவு பிறபிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

lis of 118 app ban by india

Screenshot_20200902_181326

Screenshot_20200902_181332

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம்-வெங்கட் பிரபு-விஜய் & நலன் இணையும் ‘குட்டி லவ் ஸ்டோரி’

ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம்-வெங்கட் பிரபு-விஜய் & நலன் இணையும் ‘குட்டி லவ் ஸ்டோரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kutty love storyதமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் !

தமிழ் சினிமாவில் இடைவெளியே இல்லாமல் தொடர் வெற்றி படங்களை தந்து, மேஜிக் நிகழ்த்தி வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். மிகச்சிறந்த படங்களை தந்து வரும் இந்நிறுவனத்திலிருந்து பல முக்கிய படைப்புகள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது வித்தியாசமான புதிய படைப்பையும் துவங்கியிருக்கிறது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் திறமைகளை தவறாது கண்டறிந்து, உலகுக்கு அடையாளப்படுத்தும் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் ஒரு முக்கிய படைப்பை அடுத்ததாக தயாரிக்கிறார். “குட்டி லவ் ஸ்டோரி” எனும் தலைப்பிலான ஆந்தாலஜி வகை திரைப்படத்தை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து இயக்குகிறார்கள்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் படம் குறித்து கூறியதாவது…

எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள் தான். அப்படியான ஒரு காதல் கதையை தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இப்படைப்பு அமைந்திருப்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ஒரு ரசிகனாக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோரின் படங்கள் எந்த வகை ஜானராக இருந்தாலும் அதில் வெளிப்படும் கவிதைத்தனத்தையும், அதிரவைக்கும் காட்சித்தொகுப்பையும், மிளிரும் உணர்வுக் குவியல்களையும் மனம்பொங்க ரசித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து இப்படைப்பில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக விரைவில் படத்தில் பங்கேற்கும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.

தமிழின் பெரும் ஆளுமைகளான இப்பட இயக்குநர்களுடன் தனித்தனியான படைப்புகளில் பணிபுரிவீர்களா ? என்று கேட்டபோது…

இப்படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ் சினிமாவை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்து சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன் தனியான படங்களில் பணிபுரிய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறது. ஏற்கனவே இக்குழுவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்க “ஜோஷ்வா இமைபோல் காக்க” திரைப்படத்தை தயாரித்து வருகிறோம். இன்னும் ஆச்சர்யப்படுத்த்தும் படைப்புகள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்றார்.

தற்போது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “ஜோஷ்வா இமைபோல் காக்க” , “மூக்குத்தி அம்மன்” , “சுமோ” ஆகிய படங்கள் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இயங்கி வருகிறது. மேலும் சில படைப்புகள் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கடந்த வருடம் வெளியான “எல் கே ஜி”, “கோமாளி”, “பப்பி”, “எனை நோக்கி பாயும் தோட்டா” படங்கள் அனைவரது பாராட்டையும் பெற்று பெரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு முன்பே கமலை இயக்க ‘மாஸ்டர்’ ப்ளானில் லோகேஷ்

ரஜினிக்கு முன்பே கமலை இயக்க ‘மாஸ்டர்’ ப்ளானில் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajமாநகரம், கைதி ஆகிய இரு சூப்பர் ஹிட் படங்களை அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கொரோனா பிரச்சினையால் இப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் அதனை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் வந்த தகவல்களை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனா பிரச்சினைக்கு பின்னர் ரஜினி அண்ணாத்த படத்தில் கவனம் செலுத்துவார் என்பதால் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை ஒரே நேரத்தில் பெறவுள்ளார் லோகேஷ்.

உயிரோட இருக்கணும் குமாரு… அதான் மேட்டரு; கொரோனாவுக்கு கொக்கி குமார் விழிப்புணர்வு

உயிரோட இருக்கணும் குமாரு… அதான் மேட்டரு; கொரோனாவுக்கு கொக்கி குமார் விழிப்புணர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director selvaraghavanசெல்வராகவன் இயக்கிய படங்களில் அனைவரையும் கவர்ந்த படங்களில் ஒன்று புதுப்பேட்டை.

தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் இந்த படத்தில் நடித்திருந்தனர். விஜய்சேதுபதி இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரெடியாகும் என அடிக்கடி செல்வராகவனை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுப்பேட்டை பட காட்சி வைத்து கொரோனாவுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அந்த மீம்ஸ்சில்… கொக்கி குமார் கேரக்டர் தனுஷ்க்கு மாஸ்க் போட்டுவிட்டுள்ளனர்.

அதில், “இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு… அது மட்டும்தான் மேட்டரு” என குறிப்பிட்டுள்ளார் செல்வா.

திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallaviமலையாள சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறவர் நடிகை சாய் பல்லவி.

இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராக (டாக்டராக) பணிபுரிய வேண்டுமென்றால் எப்எம்ஜிஇ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இதனையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வை எழுத வந்துள்ளார் சாய்பல்லவி

நேற்று திருச்சியில் உள்ள எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்திருக்கிறார்.

அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trump modiGDP – ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி மைனஸ் 23. 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக உற்பத்தி துறை மைனஸ் 39.3 விழுக்காடும், சுரங்கத்துறை மைனஸ் 23.3 விழுக்காடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இது கடந்த 45/50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..

சுதந்திர இந்தியாவின் மிக மோசமான சரிவு. கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது..

உலகின் மிக வலிமையான இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பொருளாதார கொள்கையை தவறாக கையாள்வதில் பிரதமர் மோடி டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

More Articles
Follows