ஊழலுக்கு காரணம் நாம்.. அரசியல்வாதி தனியா செய்ய முடியாது ; ‘இந்தியன் 2’ கமல் பேச்சு

ஊழலுக்கு காரணம் நாம்.. அரசியல்வாதி தனியா செய்ய முடியாது ; ‘இந்தியன் 2’ கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊழலுக்கு முக்கிய காரணம் நாம் தான்.; ‘இந்தியன் 2’ பிரஸ் மீட்டில் உலகநாயகன் பேச்சு

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள பிவிஆர் போரம் மாலில் நடைபெற்றது.. இதில், கமல்ஹாசன், சித்தார்த், அனிருத், இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 டிரைலர் யூடியூபில் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்..

அப்போது செய்தியாளர் ஒருவர்…

இதில் ஒரு செய்தியாளர், ஒருவர், 28 வருடத்திற்கு முன் இந்தியன் படம் வந்தது. ஆனால், அப்போதும் அதே ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதற்கு காரணம் அரசியல்வாதியா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன்..

நாம் இல்லாமல் அரசியல்வாதிகள் ஊழலை தனியாக நடத்திவிட முடியாது. ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான். இதையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.. இனி நீங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்ட வேண்டும்” என்றார்.

Public is main reason for corruption says Kamal

உண்மையை நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

உண்மையை நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மையை அதன் நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

*“நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை ‘அஞ்சாமை’ படம் தொடங்கி வைத்திருக்கிறது”

அஞ்சாமை படத்திற்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு*

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த கூடிய, மாற்றங்களுக்கு விதை போட கூடிய நல்ல படங்களை கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அஞ்சாமை’.

திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள முதல் படம் என்பதாலோ என்னவோ படம் வெளியான நாளிலிருந்தே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாமென தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரவித்துள்ளனர்.

*திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது*..

“நீட் தேர்வு கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய, எதார்த்தமான உண்மையான நிகழ்வுகளை கூட்டாமல் குறைக்காமல் சமூகத்தில் நடப்பதை அப்படியே ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் இரண்டு மணி நேரத்தில் காட்டி இருக்கிறார்கள்.

ஒரு தேர்வு என்பது எந்த அளவு முரட்டுத்தனமாக, சமூக விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய உள்நோக்கம் கொண்டவர்கள் இன்றைக்கு விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருப்பதிலே, எத்தனை சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் நடைமுறை எதார்த்தமாக கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல், தந்தை பெரியாரின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையை அதன் நிர்வாணத் தன்மையில் அப்படியே எடுத்து காட்டி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் உண்மை கசப்பாக இருக்கும். மற்றவர்களால் செரிமானம் செய்யப்பட முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உண்மை கலப்படமாக இருக்க முடியாது என்பதை ‘அஞ்சாமை’ படம் மூலமாக அஞ்சாமல் செய்திருக்கும் தயாரிப்பாளரின் அஞ்சாமையை முதலில் பாராட்ட வேண்டும். அவர் ஒரு மனோ தத்துவ மருத்துவர்.

அந்த வகையில் தன்னுடைய அனுபவங்களையும் நடப்புகளையும் இணைத்து இருக்கிறார். இது வெறும் படம் மட்டுமல்ல.. மாணவர் உலகத்திற்கு மட்டுமல்ல சமூகத்தின் கோணல்களை திருத்தக் கூடிய ஒரு அற்புதமான பாடம்” என்று கூறினார்.

*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறும்போது*…

“அஞ்சாமை என்கிற படத்தின் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்த பெயர். இன்று நாடு முழுவதும் ஒரு பெரும் விவாதத்தில் இருந்து கொண்டிருப்பது நீட் நுழைவுத் தேர்வு அடுத்ததாக நெட் தேர்வு. எல்லாவற்றையுமே ரத்து பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி எத்தனை பேர் மடிந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நிகழ்ந்து கொண்டிருக்கிற சம்பவங்களை, மிக எதார்த்தமான முறையில் படமாக்கி மக்களிடம் காட்டுவதற்கு உள்ள ஒரு துணிச்சலான முயற்சி இது. இந்த படத்தில் அச்சப்படாமல் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் துணிச்சலாக படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இதில் நடித்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுதான் இந்த படத்தின் வெற்றியே” என்று கூறினார்.

*காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர் கூறும்போது*…

“இது ஒரு துணிச்சலான தயாரிப்பு. இன்றைக்கு சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை தவறுகளை வெளிச்சம் போட்டு சுட்டிக் காட்டும் விதமாக இந்த படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வால் எப்படி சாதாரண குடும்பங்கள், அதுவும் குறிப்பாக கிராமத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களில் இருந்து குழந்தைகள் வரை எந்தவிதமான சிரமங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், பொருளாதார ரீதியாக என்னென்ன கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது, நீட் தேர்வுக்கு செல்லும் முன் அதற்காக தயாரிப்பு என்கிற பெயரிலே எப்படி சுரண்டல் நடக்கிறது, அதற்காக சாதாரண குடும்பங்கள் எவ்வளவு கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது,

பள்ளித் தேர்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போவது என இன்றைக்கு சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இந்த படத்தை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த படத்தை கீழ்மட்ட மக்கள் வரை பார்க்கும் விதமாக அரசே ஏற்பாடு செய்து உதவலாம். நீட் தேர்வுக்கான கஷ்டங்களிலிருந்து எப்படி விடுவது என்பதை திட்டமிடுவதற்கும் அவர்களுக்கு இதுபோன்ற பொருளாதார நஷ்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு இந்த படம் முன்னுதாரண படமாக இருக்கும்” என்று கூறினார்.

*அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் கூறும்போது*….

‘அஞ்சாமை’ திரைப்படம் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. நீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே குரல் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. அந்த அளவிற்கு நீட்டை வேண்டாம் என மறுதலித்து பிளஸ் டூ தேர்வுகளின் மூலமாகவே மருத்துவ கல்வியை தொடர வேண்டும் என்கிற கருத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ‘அஞ்சாமை’ என்கிற படத்தை மருத்துவர் திருநாவுக்கரசு மற்றும் இயக்குனர் சுப்புராமன் இருவரும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக தந்திருக்கிறார்கள்.

இவ்வளவு பணம் செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்களே, இதை யார் பார்ப்பார்கள், போட்ட பணம் திரும்பி வருமா வராதா என ஆயிரம் சந்தேகங்கள் எழுந்து நிலையிலும் கூட பெரியார் சொல்வது போல “கேட்கிறான் கேட்கல.. படிக்கிறான் படிக்கல.. ஆனால் நாம் கடமையை செய்ய வேண்டும்” என்பதற்கு ஏற்ப தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த இலக்கோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறார் மருத்துவர் திருநாவுக்கரசு.

நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை இந்த படம் தொடங்கி வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படத்தின் மூலம் அழுத்தமான, ஆழமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும் என்று நீட்டுக்கு எதிரான முதல் திரைப்படமாக இதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு இந்த படம் கொண்டு செல்லும். இந்த படைப்பின் மூலமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

*சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி கூறும்போது*…

“’அஞ்சாமை’ படம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அந்த காலத்தில் நாம் பார்த்த, கேட்ட செய்திகளை தொகுத்து அந்த செய்திகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல், அந்த நிகழ்வுகளில் வழியாக பாதிக்கப்பட்ட மக்கள், மாணவர்கள் என்று பல தரப்பினருடைய துயரங்களையும் அவர்களுடைய கோரிக்கைகளையும் நியாயங்களையும் தொகுத்து ஒரு சிறந்த திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிகச் சிறந்த வகையில் மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த அஞ்சாமை உருவாகி இருக்கிறது.

இயக்குநர் சுப்புராமன் மிக கவனமாக இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையில் மட்டும் மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்காக பார்க்கக் கூடியவர்கள் கூட இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்கள் எதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு சமூக அக்கறையோடு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்,

சமூகப் பிரச்சினைகளை பேசுகின்றதால், கருத்துக்களை சொல்கின்ற படமாக இருக்குமோ, ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காதோ என்பதற்கே இதில் இடம் இல்லை. இப்படியான ஒரு திரைப்படம் பெருமளவில் மக்களிடம் சென்று சேர வேண்டும்.

மக்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். தன்னுடைய முதல் படத்தில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் சுப்புராமனுக்கும் படத்தை தயாரித்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக ஒரு தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் இது ஒரு மிக மிக முக்கியமான திரைப்படம்” என்று கூறினார்.

Tamilnadu politicians appreciated Anjaamai movie

BOTTLE RADHA.. சமூக அக்கறையுள்ள ரஞ்சித் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?

BOTTLE RADHA.. சமூக அக்கறையுள்ள ரஞ்சித் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BOTTLE RADHA.. சமூக அக்கறையுள்ள ரஞ்சித் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.. ஒரு பக்கம் இயக்குனராக ரஞ்சித் பிஸியாக இருந்த போதிலும் மறுபக்கம் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார்..

நீலம் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.

இதுவரை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘புளூ ஸ்டார்’, ‘ஜே பேபி’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்..

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கி வருகிறார்.. இந்த படத்துக்கு ‘பாட்டல் ராதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.. அது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது..

இந்த ஃபர்ஸ்ட் லுக் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழியில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில் ‘பாட்டல் ராதா’ என்று ஒரு படத்திற்கு ரஞ்சித் தலைப்பு வைத்துள்ளது பல பரபரப்பை உண்டாக்கும் என் எதிர்பார்க்கலாம்.

Ranjith production new movie titled Bottle Radha

சாகாவரம் & ஆண்டனி இரு படங்களை முடித்து 5 ஹீரோயினுடன் திலீபன் புகழேந்தி ஆட்டம்

சாகாவரம் & ஆண்டனி இரு படங்களை முடித்து 5 ஹீரோயினுடன் திலீபன் புகழேந்தி ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாகாவரம் & ஆண்டனி இரு படங்களுடன் 5 ஹீரோயினுடன் ஆட்டம் போடும் திலீபன் புகழேந்தி

நடிகர் திலீபன் புகழேந்தியின் புது தமிழ் திரைப்படம்

தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி என்பது அனைவரும் அறிந்ததே .

நடிகர் திலீபன் புகழேந்தி பள்ளிக்கூடம் போகாமலே, எவன் என்கிற இரு படங்களிலும் ஹீரோவாக நடித்தவர் . இப்படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றன..

சாகாவரம் என்கிற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து உள்ளார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளன. ஆண்டனி என்கிற திரைப்படமும் முடியும் தருவாயில் உள்ளது..

இவற்றுக்கு இடையில் 5 ஹீரோயின்கள் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார் .

புதுமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

Actor Dhileepan Pugazhendhi movies updates

விஜய் அரசியலுக்கு வருவது பேராசையே.. அவர் சைலண்டில் வைலன்ட் இருக்கு.. – சௌந்தரராஜா

விஜய் அரசியலுக்கு வருவது பேராசையே.. அவர் சைலண்டில் வைலன்ட் இருக்கு.. – சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் அரசியலுக்கு வருவது பேராசையே.. அவர் சைலண்டில் வைலன்ட் இருக்கு.. – சௌந்தரராஜா

*ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் – நடிகர் சவுந்தரராஜா*

*விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு – நடிகர் சவுந்தரராஜா*

நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார்.

அப்போது பேசிய அவர்…

“விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெயின், ஃபிளைட் பிளைட்னு 2026-க்கு வந்துட்டே இருக்காங்க.

நான் மிகைப்படுத்தி பேசல, இந்த உற்சாகம்தான் பலருக்கு பயத்தை உண்டாக்கும். அந்த உற்சாகம் அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கனும்.

ஒரு விஷயம் நண்பா. நாம சின்ன விஷயம் பண்ணாலும், அதை ஃபோக்கஸ் பண்ண கேமரா இருக்கு. நாம வளரக்கூடாதுனு பண்ணுவாங்க. இந்த வைப்-தான் பலபேரை பயமுறுத்தும், பலபேரை சிந்திக்க வைக்கும். நம்ம அண்ணன் தளபதிக்கு பலமா நிற்கும்.

நம்ம அண்ணன் தளபதி விஜய், இன்னைக்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒருத்தர், சினிமா வேண்டாம்னு, நான் சம்பாதிச்ச பணம், வெற்றி, புகழ், வாழும் வாழ்க்கைக்கு இந்த மக்கள் தான் காரணம். அந்த மக்கள், இந்த மண்ணிற்காக வருகிறார் விஜய். அவர் அரசியலுக்கு வர பேராசை தான் காரணம். அந்த பேராசை, ஒவ்வொருத்தர் குடும்ப ரேஷன் கார்டில் உறுப்பினர் ஆவதுதான் அந்த ஆசை.

விஜய் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா, அவருக்கு பேசவே தெரியாதுனு நிறைய பேர் என்கிட்ட சொன்னாங்க. நான் அவங்களுக்கு பதில் கொடுக்கவே இல்லை. இப்போ சொல்றேன், மௌனத்திற்கு இருக்கும் சக்தி மிகவும் பெரியது. விஜய் மிகவும் சைலண்ட் ஆன நபர். அந்த சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு. அந்த வைலன்ஸ்-க்கு எதிராக மட்டும் தான் வெளியே வரும்.

விஜய் மிகப்பெரிய பேச்சாளர், விரைவில் அதை பார்ப்பீங்க. பேச்சாளர் பக்கம்பக்கமா பேசனும்னு அவசியம் இல்லை. ஒரு வார்த்தை பேசினா போதும். தமிழக அரசியலை படிங்க. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ஏன் ரூ. 10 லட்சம் கொடுக்கணும். நீங்கள் ரசிகரா இல்லாமல் தொண்டரா மாறுங்க. அரசியல் படிச்சு கேள்வி கேட்கணும். நீங்க கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கணும்.

நாம வாழ்ந்து, நம்மால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு நல்லது செய்வோம். விஜய் அண்ணா வழியில் மக்களுக்கும், மண்ணுக்கும் நல்லது செய்வோம், என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சவுந்தரராஜா, “தளபதி விஜய் அண்ணா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் 50-வது பிறந்தநாள், பொன்விழாவை விமர்சையாக கொண்டாடி வருகிறோம்.

சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் மாவட்ட தலைவர் அண்ணன் பாலமுருகன் தலைமையில் அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல் மற்றும் ஆவடி என நான்கு தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து இந்த தொகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் என பலருக்கு கணினி, டி ஷர்ட், ஊனமுற்றோருக்கான மிதிவண்டி மற்றும் அரிசி, சேலை, இஸ்திரி பெட்டி என ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் ஒரு கருவியாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

“ஸ்டிக்கர் அரசியலை தாண்டி, யார் செய்கிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கு. நாம் யார் என்பதை சத்தம் போட்டு கூற வேண்டிய அவசியம் இருக்கு. எல்லாத்துக்கும் விளம்பரம் வேண்டும்.

அரசியல் சார்ந்த நல்ல விஷயங்கள் மற்றும் கொள்கைகளுக்கு விளம்பரம் அவசியம். மௌனம் மிகப்பெரிய சத்தம். விஜய் எல்லாவற்றையும் அணுஅணுவாக ஆராய்ந்து, தனக்குள் அதிகம் விவாதம் செய்து ஒரு வார்த்தை பேசுவார். அது சரியாக இருக்கும் என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அவர் பேச்சாளர் என்பதை விரைவில் பார்ப்பீர்கள்.”

“கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களும் மனிதர்கள் தான். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதாக ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் மதுவிலக்கை கொண்டுவருவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை விட்டுவிட முடியாது. நடிகர்கள் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதில் மனிதாபிமானம் மட்டும்தான் உள்ளது.”

“விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு. நேரம் வரும் போது சரியாக பேசுவார்கள். ஒரு தம்பியாக அவருடன் பழகிய எனக்கும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் நம்பிக்கை இருக்கு. அதை நீங்கள் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

Soundararaja talks about Vijays political entry

பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதியார் பாடல் கரு..: காது கேளாத ஶ்ரீ ஹரி நடித்த ‘சூரியனும் சூரியகாந்தியும்’

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”

“சூரியனும் சூரியகாந்தியும்” பட இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்!

பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்!

“சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்மன், ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு டெய்லி குருஜி, தயாரிப்பு ஏ.எல்.ராஜா. “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுதல் பாவம்”
– என்ற பாரதியாரின் பாடல் தான் கதையின் மையக் கருத்து. சூரியன் மேல் காதல் கொண்ட சூரியகாந்தி பூப்போல, கதாநாயகி, நாயகனை காதலிப்பதும், காதலுக்குள் சாதி பேய் நுழைந்து, என்ன செய்கிறது என்பதை தான் ‘சூரியனும் சூரியகாந்தியும்’ படத்தின் கதை சொல்கிறது…

விரைவில் திரையில் உதயமாகிறது “சூரியனும் சூரியகாந்தியும்”!

Suriyanum Suriyagandhiyum movie trailer launch

More Articles
Follows