தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து இதே கூட்டணியில் உருவான சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ல் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது.
வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை சிவாஜி பிலிம்ஸ் சார்பாக பிரபு தயாரித்தார்.
இதில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தை உருவாக்க பி. வாசு திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் ரஜினியின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இப்படம் தள்ளிக் கொண்டே போனது.
தற்போது சந்திரமுகி 2 படத்திற்கு ரஜினி ஆசி வழங்கியுள்ளார்.
அதாவது ரஜினி இந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை பி. வாசு இயக்க சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை லாரன்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடிக்க தனக்கு அனுமதி கொடுத்த ரஜினிக்கு நன்றி கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
Raghava lawrence announces Chandramukhi 2 with Rajini blessing