‘இறந்தபின் அம்மாவை போற்றுவதில் பலனில்லை…’ ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஸ்ரீராகவேந்திரருக்கு கோயில் கட்டியிருக்கிறார்.

தற்போது அந்த கோயிலுக்கு எதிராக, தனது அம்மா கண்மணிக்கும் ஒரு கோயில் கட்டியுள்ளார்.

இந்த உலகத்தில் எவரும் தன் அம்மாவுக்கு இதுவரை கோயில் கட்டியதாக தெரியவில்லை.

அதுவும் தன் தாய் உயிரோடு இருக்கும்போது, கோயில் கட்டிய முதல் நடிகர் இவர் மட்டும்தான்.

அவர் அம்மா கண்மணியின் சிலை 5 அடி உயரத்திலும், காயத்ரி தேவியின் சிலை 13 அடியிலும் நிறுவியுள்ளார்.

இன்று நடந்த கோயில் திறப்பு விழாவில் சூப்பர் சுப்பராயன், தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், இயக்குனர் சாய்ரமணி, லாரன்சின் தம்பி எட்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லாரன்ஸ் கூறியதாவது…

அம்மா இருக்கும்போதே அவருக்கு கோயில் கட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

அம்மா இறந்தபின் அவரை போற்றுவதில் எந்த பயனும் இல்லை.

இந்த கோயில் உலகத்தில் உள்ள அனைத்து தாய்களுக்கும் சமர்ப்பணம்.

48 நாட்கள் முடிந்த பிறகு சினிமா மற்றும் என் நண்பர்களை அழைத்து ஒரு விழா நடத்தவிருக்கிறேன்.” என தெரிவித்தார்.

Raghava lawrence opened new temple for his mother Kanmani

அஜித் மகளையும் ‘தல’யில் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் அஜித்துக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் நாம் அறிந்ததே.

அஜித் படமோ, புகைப்படமோ வெளியானால் அதை டிரெண்ட்டாக்கிவிடுவதில் இவர்கள் வல்லவர்கள்.

அண்மையில் வெளியான விவேகம் டீசர் இதற்கு மிகச்சான்று.

இந்நிலையில் அஜித்-ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா பள்ளிக்கூட விழாவில் கலந்துக் கொண்டு நடனமாடியுள்ளார்.

அந்த புகைப்படங்களையும் விட்டு வைக்காத அஜித் ரசிகர்கள், அதிகளவில் பகிர்ந்து டிரெண்டாக்கியுள்ளனர்.

Thala fans making trend of Ajith daughter Anoshka dance function

ஹாஜி மஸ்தான் கேரக்டரில் ரஜினி நடிக்கிறாரா? தனுஷ் தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் கதை மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என பரவலாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில், “எனது தந்தையை நிழல் உலக தாதா மற்றும் கடத்தல்காரர் போல் சித்தரிக்கக் கூடாது.

அப்படி நீங்கள் சித்தரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் படத்தை தயாரிக்கும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்…

“எங்கள் நிறுவனத்தின் சார்பில் ரஜினிகாந்த் நடிக்க ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தை பற்றியும் அதன் கதையை பற்றியும் பத்திரிகைகளில் பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறு வந்த செய்திகளில் ஒன்றாக ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றின் பின்னணி கொண்ட கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்று ஒரு செய்தியும் பத்திரிகைகளில் வெளியானது.

நாங்கள் தயாரித்து வரும் இப்படம் மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை மட்டுமே.

இப்படத்தின் கதை, யாருடைய வாழ்க்கை வரலாற்றையோ அல்லது அவர்களுடைய நிஜ சம்பவங்களையோ கொண்டு உருவாக்கப்பட்ட கதை கிடையாது.

குறிப்பாக இப்படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதையல்ல.

இது சம்பந்தமாக படத்தின் இயக்குநர் ரஞ்சித் தன்னை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

இது ‘ஹாஜி மஸ்தான் அவர்களுடைய கதை’ என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களின் இந்த விளக்க அறிக்கையை அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dhanushs Wunderbar company clarifies Haji Masthan don Character in Thalaivar 161 movie

ரஜினி-விஜய்யை முந்த வேண்டும்; சொல்லி அடித்த அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனத்திற்காக இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

கடந்த மே 11ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகி தென்னிந்தியளவில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது-

வெளியான சில மணி நேரங்களிலேயே கபாலி, தெறி ஆகிய படங்கள் இதற்கு முன் செய்த சாதனைகளை முறியடித்துள்ளது.

விவேகம் டீசரில் அஜித் பேசிய never ever give up… என்கிற டயலாக்கை தற்போது தாரக மந்திரமாகவே ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் டீசர் வெளியான 68 மணி நேரத்தில் 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

டீசர் வெளியாவதற்கு முன்பே கபாலி, தெறி டீசரை முறியடிக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது அதை வெற்றிகரமாக தற்போது செய்து காட்டியுள்ளனர்.

Vivegam teaser break Kabali and Theri records

‘தனுஷ் ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டார்…’ விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் கதாநாயகன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

கேத்ரீன் தெரசா நாயகியாக நடிக்க, சூரி காமெடியனாக நடிக்கிறார்.

சீன் ரோல்டான் இசையைமைத்துள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இதன் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை இன்று தனுஷ் வெளியிட்டார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறியதாவது…

கதாநாயகன் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிடுகிறார். அவர் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்துவிட்டார்” என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Dhanush impressed me lot says Kadhanayagan Vishnu Vishal

‘This is sure shot winner’… அர்ஜுனின் ‘நிபுணன்’ டீசரை பாராட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Passion ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்கும் படம் ‘ நிபுணன்’.

இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து இயக்குனர் அருண் வைத்யநாதன் கூறியுள்ளதாவது…

அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை தயாரித்து இயக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

150 படங்களையும் கடந்த அவரது உன்னத உழைப்புக்கும், சற்றும் குறையாத அவரது உற்சாகத்துக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்லுவேன்.

அவரது சாதனையை கொண்டாடும் விதமாக ‘நிபுணன்’ படக் குழுவினர் இந்தப் படத்தின் டீசரை 150 திரை உலக பிரபலங்கள் மூலமாக ட்வீட் செய்து வாழ்த்த வேண்டும் என திட்டமிட்டோம்.

ஆயினும் எங்களுள் ஒரு தயக்கம், இது சாத்தியமா,நடக்குமா, அவ்வாறு ட்வீட் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்ற ஐயத்தோடு தான் அவர்களை அணுகினோம். அர்ஜுன் சார் மேல் திரை உலக கலைஞர்கள் வைத்து இருக்கும் மரியாதை என்னவென்று நாங்கள் அறிந்துக் கொண்ட தருணம் இது.

நாங்கள் அணுகிய திரை உலக கலைஞர்கள் எல்லோரும் உடனடியாக ஒப்புக் கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் சார் உட்பட எங்கள் படக் குழுவினர் ரஜினி காந்த் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற சென்றோம்.

அப்போது அவர் ‘நிபுணன்’ படத்தின் டீசரை பார்த்தார். மிக மிக உற்சாகமாகி எங்களை பாராட்டினார்.

‘This is sure shot winner’ என்று அவருக்கே உரிய பாணியில் பாராட்டியதோடு , படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தார்.

அர்ஜுன் சாருக்கும் , ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம்.

நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி வெளி வர உள்ளது. அர்ஜுன் சாருடைய உழைப்பை கொண்டாட எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன் என்று பெருமையோடுக் கூறினார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.

Rajinikanth prasies Arjun and his Nibunan Teaser

More Articles
Follows