தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் 5 வயதில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி இன்று வரை 60 ஆண்டு காலமாக ஜொலித்து வருகிறார் கமல்ஹாசன்.
களத்தூர் கண்ணம்மா துவங்கி ஓய்வின்றி விதவிதமான வேடங்களை ஏற்று உலக நடிகர்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் இந்த உலகநாயகன்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரையுலகில் கமலின் 60 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் அவரின் பிறந்தநாளில் (நவ. 7,) பெரும் விழாவை நடத்துகிறது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்.
இந்த விழா நவம்பர் 8… நவம்பர் 9 வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில்….
கமல் பிறந்த நாளான நவ.,7 அன்று தான் அவரது தந்தை சீனிவாசனின் நினைவு நாள் ஆகும். அன்று, சொந்த ஊரான பரமக்குடியில், தந்தையின் சிலையை, கமல் திறந்து வைக்கிறார்.
நவம்பர் 8ல்..
சினிமா உலகில் குருவான பாலசந்தர் சிலையை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு திறந்து கமல் வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பாலசந்தர் குடும்பத்தினர், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மஹாத்மா 150வது பிறந்த நாளை முன்னிட்டு, மதியம் 3.30 மணியளவில், ”ஹே ராம்” படம் திரையிடப்பட உள்ளது.
இதனையடுத்து நவம்பர் 9ல்…
இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Rajini and Ilayaraaja will atten Kamal 60 event