தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சமூக குற்றங்களை கண்டித்து நடக்கும் பாரத் யாத்ரா கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும்.
குழந்தைகளுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக இந்த பயணம் நடைபெறுகிறது.
செப்டம்பர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது.
வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது.
இதில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜனும் டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
Rajini family participated in Shree Dayaa Foundations Bharat Yatra