தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.
சிஸ்டம் சரியில்லை என்றீர்களே அது தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை நாடு முழுவதுமா? என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர், “தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன்” என்றார்.
மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்தார்.
Rajini speaks about his alliance with Kamal in Politics