தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 25 வருடங்களாக நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசாதவர்களே இல்லை.
90ஸ் கிட்ஸ் எனப்படும் 1990களில் பிறந்த குழந்தைகள் கூட தற்போது ரஜினியை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இதை கூட ரஜினி… இப்போ உள்ள பசங்க செம டேலண்ட்டாக இருங்காங்க என கூறி வருகிறாராம்.
ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் முதன்முறையாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தான்.. நான் அரசியலுக்கு வருவது உறுதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என அறிவித்தார்.
அதன்பின்னரும் அவரை கலாய்த்து மீம்ஸ் வந்தாலும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை தினம் தினம் செய்து வருகிறார்.
ரசிகர்கள் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமனம் செய்தார். மேலும் பல்வேறு துறை சார்த்த வல்லுனர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி பற்றி அறிவிப்பார் என தகவல்கள் கசிந்தன.
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்தும் நின்று போனது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் 2020 நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்சியை தொடங்குவார் ரஜினியின் நெருங்கிய நண்பரும் அரசியல் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று ஜீலை 15ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார்.
Rajini will launch his political party on Nov 2020 says Karate Thiyagarajan