தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரஜினி ஜெயில் வார்டனாக நடிக்கிறார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இதனை தெரிவித்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.
மேலும், தற்போது இயக்குநர் நெல்சனின் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Rajinikanth completes shooting for ‘Jailer’Confirms Nelson