தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ரஜினிகாந்த்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவர்களை ஒருங்கிணைப்பதற்காக உலக அளவில் பல மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
தற்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் என்பவர் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சுதாகர் இன்று ஜனவரி 6 உடல்நலக் குறைவால் காலமானார்.
ரஜினி ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் சுதாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்ன செய்தியாளர்களிடம் பேசும் போது..
“எனது நீண்ட கால நண்பரை நான் இழந்து விட்டேன். எனக்கு நெருக்கமான ஒரு நண்பரை இழந்தது வருத்தம் அளிக்கிறது.
என் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பார். நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் சுதாகர்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லை. எவ்வளவு மருத்துவங்கள் செய்தும் அது பயனில்லை. இன்று அவரை இழந்தது பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.”
இவ்வாறு பேசினார் ரஜினிகாந்த்.
Rajinikanth paid last respect to Sudhakar