தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரசிகர்கள் சந்திப்பின்போது தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார் ரஜினிகாந்த்
அப்போது போட்டோ எடுக்கும் போது அதன் பின்னணியில் பாபா முத்திரை தாமரையுடன் இருந்தது.
ஆனால் கட்சி அறிவித்து அதன்பின்னர் ரஜினி மன்றம் அறிவிப்பை வெளியிட்டார். அந்த இணையதளத்தில் பாபா முத்திரை மட்டுமே தற்போது இடம் பெற்றிருக்கிறது.
அதில் உள்ள தாமரை பூ இப்போது இல்லை.
தாமரை சின்னம் பாஜக.வின் கட்சி சின்னம். மேலும் பா.ஜக.வின் பினாமியாக ரஜினி செயல்பட்டு வருகிறார் என சில கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த சர்ச்சைகளை தவிர்க்கவே தாமரையை அகற்றிவிட்டு பாபா முத்திரையை மட்டுமே இடம் பெற செய்திருக்கிறாராம் ரஜினிகாந்த்.