தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவேரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போராட்டங்கள் நடைபெறுவதால் பதட்டம் நிலவி வருகிறது.
தன்னுடைய ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த், கர்நாடகாவில் இருந்தார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இப்பிரச்சினை வரும்போதெல்லாம் ரஜினியின் பெயர் அடிப்படும்.
இந்நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு ரஜினி கூறியதாக கூறப்படும் பேட்டி இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அதில்…”தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். காவிரி பிரச்சினை தொடர்பாக தயவு செய்து யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.
அப்படி ஈடுபட்டால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒருவேளை இது தொடருமானால் எனது ரசிகர் படையுடன் நான் கர்நாடகா செல்வேன்” என்று தெரிவித்திருந்திராம்.
கபாலி படத்தில் நான் 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன் சொல்லு என்று ரஜினிகாந்த் பன்ச் டயலாக் பேசி நடித்திருப்பார்.
தற்போது இதுபோன்று செய்து காட்டுவாரா? என கேட்கின்றனர்.