தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உடல் நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது.
இன்று அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அவரின் ரத்த அழுத்தம் நேற்றை விட தற்போது சீராக உள்ளது.
அவருடைய ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும் அவரது உடல்நிலை சீராகும் வரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
#GetWellSoonThalaiva மருத்துவமனையில் ரஜினி அனுமதி.; எப்படியிருக்கிறார் தலைவர்?
ரஜினிகாந்த் உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் ரஜினியிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இது தொடர்பான செய்தி குறிப்பில்…
ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை இன்று (டிசம்பர் 26) தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அவர் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டரில்…
“உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
Rajinikanth’s Blood Pressure Continues to Stay High, Decision on His Discharge today evening