தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அண்ணாத்த படத்திற்காக இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.
இமான் இசையைமக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது-
இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்தப் படத்தை இந்தாண்டு 2020 தீபாவளிக்கு வெளியிட நினைத்து விறுவிறுப்பாக படத்தை படமாக்கினார் சிவா.
ஆனால் கொரோனா பிரச்சினையால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தற்போது 6 மாதத்திற்கு பிறகு சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்துள்ளதால் சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே கிழக்குக் கடற்கரைச் சாலையில் செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ரஜினி இல்லாத காட்சிகளை எடுக்கவிருக்கிறார்களாம்.
அதன்படி கீர்த்தி சுரேஷ் – நயன்தாரா இருவரும் தோன்றும் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.
அண்ணாத்தே படப்பிடிப்பில் டிசம்பர் அல்லது ஜனவரியில் ரஜினி பங்கேற்பார் என கூறப்படுகிறது.
எல்லாம் திட்டமிட்டப்படி நடந்தால் 2021 கோடை விடுமுறையில் படத்தை வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இதனிடையில் தன் அரசியல் கட்சி அறிவிப்பு, மதுரை மாநாடு, தமிழகளவில் பிரச்சாரம், தேர்தல் களம் என ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rajini’s ‘Annaatthe’ To Resume Shooting In december