தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘இது டைகரின் கட்டளை’ பாடல் நேற்று வெளியானது.
‘ஜெயிலர்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்படுத்தும் விதமாக தலைப்பை மாற்றக்கோரி கேரளாவில் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த படத்தின் கதைக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.
மேலும், அங்கு ‘ஜெயிலர்’ என்ற பெயரிலேயே புதிய மலையாள படமொன்று தயாராகி உள்ளது.
அதில் தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆனாலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும், எனவே கேரளாவில் மட்டும் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்பை மாற்றி வேறு பெயரில் வெளியிடுமாறும் வற்புறுத்தி உள்ளனர்.
ஆனால் தலைப்பை மாற்ற ரஜினியின் ‘ஜெயிலர்’ பட குழுவினர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
Rajini’s ‘Jailer’ releasing with a different name in Kerala