தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2020ம் ஆண்டில் தமேல் சேனல் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இதில் முதலிடத்தில் ரம்யா பாண்டியன் இடம் பெற்றுள்ளார்.
ராஜூ முருகன் இயக்கி தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4-வது சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார்.
2. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
3. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பவித்ரா லட்சுமி.
4. டிவி தொகுப்பாளினி & நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.
5. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் அசத்தும் ஆயிஷா.
6. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன்.. பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானார்.
7. சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
8. விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
9. கிகி விஜய்… மானாட மயிலாட, நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.
10. தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன்.
11. அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹேமா பிந்து உள்ளிட்ட 20 நடிகைகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
Ramya Pandian wins most desirable tv artist in 2020