தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவான இப்படம் இன்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரத்துடன் வெளியானது.
இதையடுத்து மலையாள இயக்குனர் சக்கீர் மடதில் இயக்கத்தில் தியான் சீனிவாசன் நடித்துள்ள மலையாள ‘ஜெயிலர்’ படமும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியாகுவதாலும் ஒரே நேரத்தில், ஒரே தலைப்பில் 2 படங்கள் வெளியானால் அதன் கருப்பொருளின் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும்.
எனவே, மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sakkir postponed ‘Jailer’ release due to fear of superstar rajinis