தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கார்த்திக் வர்மா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் மற்றும் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘விரூபாக்ஷா’.
இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 21ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதனையடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
வருகிற மே 5ம் தேதி இந்த படத்தை தமிழில் வெளியிட உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் நடிகை சம்யுக்தா பேசுகையில்…
”எனக்கு தமிழ் மொழியும், தமிழ்நாடும் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘வாத்தி’ படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘விரூபாக்ஷா’ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த திரைப்படம் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். ஒரு திரைப்படம் வெளியாகி அதனை ஓடிடியில் காண்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘‘விரூபாக்ஷா’ திரையரங்கில் கண்டு மகிழ வேண்டிய படம்.
ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக புதிய அனுபவத்தை வழங்கக்கூடியது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், ஒலி… என அனைத்தின் சிறப்பம்சங்களும் திரையரங்கில் மட்டுமே சாத்தியம். இந்த அனுபவம் ஓ டி டி மற்றும் சிறிய திரையில் கிடைக்காது.
நான் பாலகாட்டைச் சேர்ந்த பெண்.. நான் கேரளா சேலை கட்டினால் கேரளா பையன்கள் எனக்கு அதிகம் லைக் செய்வதை விட தமிழ் பசங்க தான் அதிகமாக லைக் பண்றாங்க.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன், தமிழில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
Samyktha speech at virupaksha event