தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
அதன் பின்னர் துணைத் தலைவர் மகேந்திரன்.. “தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி செய்வது போல தெரியவில்லை.
தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் இன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில்… “மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.
எனது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நட்பையும் நேசத்தையும் காட்டிய கமல் சாருக்கும் அவரது குழுவுக்கும் நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சில நிமிடங்களில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
“எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
என்னைப் போல் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி வாக்களித்தமைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
சில காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என தெரிவித்துள்ளார் பத்மபிரியா.
Santhosh Babu IAS and Padma Priya leave MNM