தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பளித்து உள்ளது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.
பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.
குற்றவாளிகள் அனைவரும் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.
இதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் இதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடிப்படையினர் 200க்கும் மேற்பட்டோர் கூவத்தூர் விடுதிக்கு சென்றுள்ளனர்.
Sasikala DA Case Verdict