தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல்களை இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“இதில் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் மூன்றில், இரண்டு பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் முடித்து விட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பரில் வெளியிட இருக்கின்றனர்.
இப்படம் அடுத்த வருட (2017) தீபாவளிக்கு வெளிவரும் எனத் தெரிகிறது.