தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகாசமுத்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் டான்ஸ் ஆடுவது, பாட்டுப்பாடுவது, சினிமா நிகழ்ச்சி, முக்கிய நடிகர்களின் திருமணம், வரவேற்பு என பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சென்று அது குறித்தான புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ‘டக்கர்’ பட புரமோட் செய்யும் விதமாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் என்றென்றும் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். கேட்டார்.
அதற்கு பதிலளித்த சித்தார்த் “என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா” உடன் என்று கூறினார்.
இதன் மூலம் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Siddharth indirectly confirms his relationship with Aditi Rao Hydari