தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ், உபாசனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த ‘லோக்கல் சரக்கு’ என்ற படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 12 சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில்…
“இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக என்னை சந்தித்தார். அப்போது ‘கடைசி தோட்டா’ படத்தை பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்தேன்.
ஆனால், உள்ளே வந்த பிறகு தான் ‘லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்தேன். சரக்குக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை. இதுவரை என் வாழ்வில் ஒரு துளி கூட மதுவை அருந்தியதில்லை, அதேபோல் சிகரெட் புகைத்தது இல்லை.
இரண்டு படங்களில் மட்டும் மது குடிப்பது போல் நடித்தேன், பிறகு அது கூட தேவையில்லை என்று விட்டுவிட்டேன். நமக்கு பழக்கம் இல்லாத விசயங்களை பெரிய திரையில் எதற்காக செய்ய வேண்டும், அதை பார்த்து இரண்டு பேர் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதை விட்டுவிட்டேன்.
சினிமாவில் எப்படி என்றால், 13 ரீல் வரை அனைத்தையும் காட்டிவிட்டு, ஒரே ஒரு ரீலில் இதெல்லாம் தப்பு என்று மெதுவாக சொல்வார்கள். அப்படி இல்லாமல், மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல கூடிய ஒரு படமாக இந்த படம் இருக்க வேண்டும். அதே போல், தம்பி தீனா சொன்னது போல், ஹாங்கோவராகி மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும், அதே சமயம் ஹாங்கோவர் ஆகி தியேட்டரிலேயே தூங்கி விடாமலும் இருக்க வேண்டும்.
ஊடகத்தினர் தான் இதுபோன்ற படங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற சிறிய படங்களுக்கு தயாரிப்பாளர் தான் அனைத்துக்கும் பணம் செலவழிக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
எனவே இதுபோன்ற படங்களுக்கு ஊடகங்கள் தான் உதவி செய்ய வேண்டும். இந்த தலைப்பு வாங்கவே ராஜேஷ் ரொம்ப கஷ்ட்டப்பட்டார் என்று சொனார்கள். சரக்கு வாங்கவே இங்கு கஷ்ட்டம் தான், அப்படி இருக்க தலைப்புக்கு ரொம்ப கஷ்ட்டப்பட்டு இருக்காங்க. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, அந்த பொழுதுபோக்கு அடுத்தவங்களை பாதிக்காதபடி இருக்க வேண்டும், அது தான் நல்ல படம்.
ஆனால், எந்த காலத்திலும் நெறிமுறைகளை நாம் விடக்கூடாது. பள்ளி மாணவர்களிடையே சாதி சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட சம்பவம் பயங்கரமாக இருக்கிறது. இதற்கு சினிமாவும், அரசியலும் ஒரு காரணமாக இருப்பது வருத்தமளிக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுவனையும், அவன் தாயையும் பார்க்கும் போது ரொம்ப கஷ்ட்டமாக இருக்கிறது. சாதியை தூக்கி பிடித்து படம் எடுப்பவர்கள், அந்த படத்தின் லாபத்தில் ஒரு தொகையை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கொடுங்க, அது தான் உண்மையான சேவை, அதை விட்டுவிட்டு, அவனுக்கும் இவனுக்கும் சண்டை, என்று படம் எடுத்துவிட்டு, நீங்க பணம் சம்பாதிப்பது சரியா?
சினிமாவில் இருக்கும் 25 கிராப்ட்களுக்கும் பணம் கொடுப்பது தயாரிப்பாளர் தான், ஆனால் அவர் தான் அனைவரும் சொல்வதை கேட்க வேண்டும், அப்படி இருந்தால் அவரால் எப்படி ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும், உங்கள் அனைவருக்கும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர் பாக்கெட்டில் பணம் வருவதற்கு நீங்கள் ஒன்று சேர்ந்து உழைத்திருக்கிறீர்களா?, அப்படி உழைத்தால் சினிமா நன்றாக இருக்கும்.
இந்த நேரத்தில் எனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல விரும்புகிறேன். நடிகர் சித்தார்த் படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமானேன், அதற்காக அட்வான்ஸை தயாரிப்பாளர் கொடுத்து விட்டார், தேதியும் ஒதுக்கி கொடுத்து விட்டேன்.
சில நாட்களுக்கு பிறகு மீண்டும் என்னை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர், அந்த படத்தில் நான் இல்லை என்று சொல்லிவிட்டார். காரணம் கேட்டதற்கு, அந்த படத்தின் நாயகன் சித்தார்த் தான் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக சொன்னார். ஏன் என்று கேட்டதற்கு, நான் பா.ஜ.க-வை சேர்ந்தவன் என்றும், அவர் மோடி எதிர்ப்பாளர், நாங்கள் ஒன்றாக நடித்தால் மக்கள் அவரை ட்ரால் செய்வார்கள் என்று சொன்னாராம்.
சோசியல் மீடியாவில் வீரமாக பதிவுகளை போடும் சித்தார்த்துக்கு தைரியம் இல்லை. சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு அதை புரிந்துக்கொள்ளாத சித்தார்த் வெறும் பேப்பர் சிங்கம், பேப்பர் புலி.
ஆனால் அதே படத்தில் மாதவனுடன் நடிக்க சம்மதித்துள்ளார் சித்தார்த்.
நடிகர் மாதவன் கூட ஒரு மோடி ஆதரவாளர் தானே. அவர் கூட மட்டும் நடிப்பது ஏன் என்பது புரியவில்லை.
இதற்கு எதிர்மாறான மற்றொரு சம்பவமும் நடந்தது. உதயநிதி ஹீரோவாக நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் என்னை நடிக்க இயக்குநர் அனுகினார். அப்போது அவரிடம், நான் பா.ஜ.க, அவர் திமுக, நான் நடிப்பது அவருக்கு சம்மதமா? என்று அவரிடம் கேளுங்க என்றேன்.
அதற்கு அவர், ”உங்களோடு இணைந்து நடிப்பதில் உதயநிதி சாருக்கு சம்மதம், நீங்க என்ன சொல்வீங்க என்று தான் அவர் கேட்க சொன்னார்” என்று சொன்னார். இது தான் நெறிமுறை. அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, அதற்கு இயக்குநர் தான் காரணம். நான், இது தொடர்பாக நடிகர் சித்தார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறேன், அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
‘லோக்கல் சரக்கு’ நிச்சயம் வெற்றி பெறும். யோகி பாபுவின் காமெடிகள் சிறப்பாக வந்திருக்கிறது. தினேஷ் மாஸ்டர், உபாசனா உள்ளிட்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள், படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும்.” என்றார்.
Siddharth is like paper tiger but Udhayanidhi is good says SVe Shekar