தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்ஏசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானோ ஊரடங்கால் (முன்பே) படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது சினிமா சூட்டிங் நடத்த அரசு அனுமதியளித்தும் இப்பட சூட்டிங் தொடங்கப்படமாமல் இருந்தது.
எனவே சிம்பு ரசிகர்கள் மாநாடு பட ‘அப்டேட்’ தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…
தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து… #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்.
என சில நிமிடங்களுக்கு முன்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Simbu starring Maanadu shoot starts from november 1st week