‘படையப்பா’ பாணியில் சிம்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதில் சிம்பு மூன்று வேடம் ஏற்க உள்ளதையும், அதில் இரண்டு கேரக்டர்கள் பற்றிய தகவல்களையும் தெரிவித்திருந்தோம்.
முதல் கேரக்டரான மதுரை மைக்கேலுக்கு ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்.

இரண்டாவது கேரக்டரில் 60 வயது முதியவராக அஸ்வின் தாத்தா என்ற கெட்டப்பில் நடிக்கிறார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில் படையப்பா பாணியில் ரஜினி ஸ்டைலாக போஸ் கொடுப்பது போன்று சிம்பு நிற்கிறார். அவரின் முதுகுபுறம் மட்டுமே படத்தில் தெரிகிறது.

அருகில் மொட்டை ராஜேந்திரன் கேமராவை பார்த்த படி நிற்கிறார்.

விஜய்-சூர்யா-கார்த்தி வழியில் ஆர்வம் காட்டும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்க்கு தமிழகத்தை போன்றே கேரளாவிலும் ரசிகர் வட்டம் உருவாகி வருவதால், அவரது படங்களில் மலையாளம் நிறையவே மணக்கிறது.

அதற்கு தெறி படத்தை சரியான உதாரணமாக சொல்லலாம்.

அதுபோல், சூர்யா-கார்த்திக்கு ஆந்திராவில் ஆச்சரியப்படும் அளவிற்கு மாஸ் உருவாகியுள்ளது.

தோழா படம் கிட்டதட்ட ஆந்திராவை குறிவைத்தே உருவாக்கப்பட்டது

தற்போது இவர்களின் பாணியை பின்பற்றி விக்ரம் ஒரு புது முடிவு எடுத்திருக்கிறாராம்.

இருமுகன் படத்திற்கு கேரளாவிலும் ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு இருந்துள்ளது.

எனவே விரைவில் நேரடி மலையாளம் மற்றும் தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

‘ரெமோ’ புரொடியூசரின் தைரியமான முடிவு பலன் தருமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’ அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

பெரும்பாலும் தமிழகத்தில் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் வெளிநாட்டில் பிரிமியர் காட்சிகள் திரையிடப்படும்.

இக்காட்சிளால் தயாரிப்பாளருக்கு பெருந்தொகை கிடைக்கும்.

இதனால் சில சமயங்களில் படம் பற்றிய விமர்சனமும் திருட்டு டிவிடியும் கூடவே வந்துவிடும்

எனவே, பெருந்தொகையை கூட பொருட்படுத்தாது, தமிழ் நாட்டில் திரையிடப்படும் முதல் காட்சிதான் ரெமோவின் முதல் காட்சியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

இதன்மூலம் திருட்டு டிவிடி வெளியாவதை கொஞ்சமாவது தடுக்க வாய்ப்புள்ளது.

இவரின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கும் பட்சத்தில், மற்ற தயாரிப்பாளர்களும் இதை பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிகிறது.

‘காதல் எங்கே? ஏழு ஆண்டு உறவு முறிவு’ – வரலட்சுமி பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா உலகில் காதல், திருமணம் மற்றும் விவாகரத்து அடிக்கடி நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான்.

இதில் நீண்ட நாட்களாக பேசப்பட்டது விஷால்-வரலட்சுமியின் காதல்தான்.

இவர்கள் இருவரும் காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

ஆனால் நல்ல நட்பு உள்ளது என்று பலமுறை தெரிவித்துள்ளனர்.

ராதிகா சரத்குமாரின் மகளின் திருமண விழாவில் கூட கலந்து கொள்ளாத வரலட்சுமி, விஷாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் காதலை போட்டு உடைத்துள்ளார் வரலட்சுமி.

“ஏழு ஆண்டுகளாக இருந்த எங்களுடைய காதல் உறவை உடைத்து விட்டார்.

அச்செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார்.

உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே? என பாய்ந்துள்ளார் வரலட்சுமி.

அவர் யாரை குறிப்பிட்டு சொல்லியுள்ளார் என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.

 

பின்குறிப்பு:  அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து, நான் என் வேலையை பற்றியே குறிப்பிட்டேன். அது என்னை பற்றியது இல்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

குரு பாக்யராஜுக்கு பார்த்திபன் செய்யும் நன்றி கடன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என மாறி மாறி உருவெடுக்கும் பார்த்திபன் அடுத்து, இயக்குனராக இருக்கிறார்.

அதற்கான அறிவிப்பையும் முன்பே தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்ற படத்தை அறிவித்துவிட்டு கலைஞர்கள் தேர்வில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது தனது குரு கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவை இப்படத்திற்கு நாயகனாக்கி இருக்கிறார்.

நாயகியாக ‘என்னை அறிந்தால்’ மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்த, பார்வதி நாயர் நடிக்கிறார்.

பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு போராடி வரும் சாந்தனுவுக்கு உதவிட அவரை தேர்ந்தெடுத்தேன் என்றும், இது தனது குரு கே.பாக்யராஜ் அவர்களுக்கு தான் செய்யும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு ப்ரெண்ட்டு கிடைச்சிட்டாரு; அப்பா-அம்மாதான் கிடைக்கல!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து கௌரவ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி.

லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஆர். கே. சுரேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்க, தற்போது சூரியும் இணைந்துள்ளார்.

உதயநிதிக்கு பெற்றோர் நடிக்கதான் இன்னும் ஆள்கள் கிடைக்கலையாம். அதற்கான தேர்வு தற்போது நடைபெறுகிறதாம்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு அக். 10ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக ரூ. 60 லட்சத்தில் செட் ஒன்று போடப்பட்டு வருகிறது.

More Articles
Follows