தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் நம்முடன் இருக்கும் ஒரே உறவு என்றால் அது நண்பர்கள் மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையல்ல
இந்த உன்னதமான உறவை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. (ஆகஸ்ட்டின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது கொண்டாடப்படுவது வழக்கம்)
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் தனது பெஸ்ட் ஃபிரெண்டின் படத்தைப் பகிர்ந்து, “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட பெஸ்ட் ப்ரெண்ட் யார் தெரியுமா? அவரது மகள் ஆராதனாதான்.
பொதுவாக சிவகார்த்திகேயன் தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர மாட்டார்.
இன்று தனது மகளுடன் இருக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
Sivakarthikeyan best friend photo goes viral