தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரே நேரத்தில் தமிழ் – தெலுங்கில் இந்த படம் வெளியாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு பரத் ஷங்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி சென்னை தாஜ் ஹோட்டலில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மடோன், சிவகார்த்திகேயன், சரிதா, அதிதி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் மிஷ்கின் பேசும்போது..
“திறமையான இளம் இயக்குனர்கள் பலர் வருகிறார்கள். மடோன் அஸ்வின் முதல் படத்திலேயே (மண்டேலா) மிகப்பெரிய தேசிய விருதை வென்றார்.
தற்போது அவரது இரண்டாம் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பது அவருக்கு மற்றொரு விருது. இந்த படத்தில் முழுக்க முழுக்க நான் ஒரு வில்லனாக நடித்துள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது.”
என்று பேசினார் மிஷ்கின்.
Sivakarthikeyan is 2nd award for Madon says Mysskin