தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் 2 தேசிய விருதுகளை வென்றதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மண்டேலா’.
சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், வசன கர்த்தாவுக்கான விருதும் மண்டேலா திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது
மடோனா அஸ்வின் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு & ஷீலா நடித்திருந்தனர்.
தற்போது மடோனா அஸ்வின் இயக்கவுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தப் படத்தில் கவுண்டமணி மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
கியாரா அத்வானி ஹீரோயினாகவும் மிஷ்கின் வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.
இந்நிலையில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் விஜய்சேதுபதியை நடிக்கவைக்க படக்குழு அணுகியதாக தகவல்கள் வந்துள்ளன.
எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
Sivakarthikeyan – Vijay Sethupathi joins for a new film?