தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பரவல் குறைவதை (நாங்க சொல்லலப்பா…) தொடர்ந்து இன்று ஜனவரி 28 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
மேலும் ஜனவரி 30 முதல் இனி வரும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதனால் இரவு காட்சி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் படத்தை திரையிட வாய்ப்புள்ளதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே ஓரிரு படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்க தொடங்கியுள்ளனர்.
விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை பிப்ரவரி 4ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
மேலும் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தையும் ரிலீஸ் செய்ய நல்ல தேதியை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்தை மார்ச் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.
இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.
தற்போது இப்பட இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
Sivakarthikeyan’s Don release date locked?