தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ மற்றும் ‘நானே வருவேன்’ ஆகிய இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள ‘வாத்தி (SIR)’ என்ற படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இந்தப் படம் 1920களில் நடக்கும் கால கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.
மேலும் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து அடுத்தக்கட்ட படிப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இதில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவலை எதிர்ப்பார்க்கலாம்.
‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார் சிவராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivarajkumar will be part of Rajini and Dhanush movies