தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடெங்கிலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் முதல் மக்களிடம் வருமானம் இல்லை. தனியார் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. ஊழியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டம் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மட்டுமே சம்பளம் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுப்படுபவர்கள் சிரமத்தில் உள்ளனர் என்பதும் பணியின் போது சில ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
தற்போது வரை தியேட்டர்கள் திறந்தப்பாடில்லை. அதுபோல் சினிமா சூட்டிங்குக்கும் இதுவரை அரசு அனுமதிக்கவில்லை.
தமிழகத்திலும் இதே நிலை தான் இன்று வரை தொடர்கிறது.
சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள், டாஸ்மாக், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்க அரசு அனுமதி அளித்தாலும் இதுவரை பள்ளிகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.
கடைகள் திறக்கப்பட்டாலும் மாலை 7 மணிவரை மட்டுமே திறக்க அனுமதியுள்ளது. அதை மீறி திறக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் செப்டம்பரிலும் ஊரடங்கு இதே தளர்வுகளுடன் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில நாளிதழ்கள் மற்றும் இணையத்தளங்களில் செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.
வார நாட்களில் காலை காட்சிகளுக்கு கூட்டமே இருக்காது. வெள்ளி இரவு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மட்டுமே தியேட்டர்கள் நிரம்பி வழியும்.
அதுபோல் வார நாட்களில் மாலை காட்சி மற்றும் இரவு காட்சிகளுக்கு கூட்டம் இருக்கும்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமே இல்லை. மாலை 7 மணி முதல் காலை வரை கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும்போது எப்படி தியேட்டர்களில் மாலை காட்சிகளுக்கு வரவேற்பு இருக்கும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு இருக்கும்போது அன்றும் காட்சிகள் திரையிட வாய்ப்பில்லை.
போதிய வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் நிச்சயமாக தங்கள் வேலைகளை விட்டுவிட்டு காலை காட்சிகளுக்கு செல்ல வாய்ப்பில்லை.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காத நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் தியேட்டருக்கு அனுப்ப போவதில்லை. பணம் கொடுக்கும் சூழ்நிலையிலும் பெற்றோர்கள் இல்லை.
மேலும் 10 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வெளியே சுற்ற அனுமதியில்லை. அப்படியிருக்கையில் அந்த வயதினரும் தியேட்டருக்கு வரப்போவதில்லை.
இவையில்லாமல் தியேட்டரில் சமூக இடைவெளியுடன் மக்கள் அமர வேண்டும் என்ற விதி உள்ளது. எனவே போதுமான மக்கள் இல்லாமல் படங்களை திரையிட வாய்ப்பில்லை.
டாஸ்மாக்கை திறக்கும் அரசு தியேட்டர்களை திறப்பதில்லையே? என்ற நியாயமான கேள்வியும் இங்கே எழுகிறது.
ஆனால் சரக்கு வாங்கி வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் அடித்துக் கொள்ளலாம். அது சினிமாவுக்கு சாத்தியமில்லை.
மேலும் பல மால்களில் சரக்கு அடித்து உள்ளே செல்ல அனுமதியும் இல்லை. இதனால் அந்த மது பிரியர்கள் கூட்டமும் தியேட்டருக்கு செல்ல முடியாது.
ஆக பள்ளிகளை போல தியேட்டர்கள் திறப்பதும் தற்போது சாத்தியமில்லை.
கொரோனா அச்சுறுத்தலில் இருந்து அரசும் மக்களும் சகஜநிலைக்கு திரும்பும்வரை இதற்கு முடிவு கிட்டப்போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.