யுவன்-மெட்ரோ சிரிஷை அழைத்துப் பாராட்டி மகிழ்ந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி.

இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்த பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.

அடுத்த ஹிட்டுக்கு ஆயத்தமாகி விட்டார் இந்த மெட்ரோ நாயகன் சிரிஷ்.

STR aka Simbu praises Yuvan and Metro Sirish

Breaking: கமல் கிண்டல்; பின்னணியில் பாஜக; கட்சி பெயர்.. ரஜினியின் அதிரடி பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் என்றால் மீடியாக்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான்.

அதுவும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவித்தவுடன் அவரின் கருத்துக்கள்பற்றிய விவாதங்களை வாரத்திற்கு 2 முறையாவது அரங்கேற்றி வருகின்றனர்.

ஆன்மிக அரசியலே தன் பாதை என்ற அறிவித்திருந்தார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் எம்ஜிஆர் போன்ற நல்லாட்சியை கொடுப்பேன் என்றார்.

இதனிடையில் இயக்குனர் கரு. பழனியப்பன் ஒரு பேட்டியில் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதற்கு பல்வேறு ரஜினி ரசிகர்கள் தங்கள் பதிலடிகளை பதிவிட்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அவர் தன் ஆன்மிக பயணத்திற்காக இமயமலை சென்றிருந்தார்.

இன்று சற்றுமுன் அவர் சென்னை திரும்பினார். அவர் வருகை அறிந்த செய்தியாளர்கள் அவர் வீட்டின் முன்பு கூடியிருந்தனர்.

அப்போது நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அவற்றை இங்கே தொகுத்துள்ளோம்..

  • ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு மனது புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.
  • புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது
  • ரத யாத்திரை என்பது மத கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மத கலவரம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது
  • சினிமாத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன்.
  • ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்தியில் உண்மையில்லை.
  • என் பின்னால் பாஜக இல்லை. என் பின்னால் கடவுளும் மக்களும் தான் உள்ளனர். இதனை பலமுறை சொல்லிவிட்டேன்.
  • மீதமுள்ள  16 மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்.
  • பல விஷயங்களில் பதிலளிக்காமல் ரஜினி நழுவுகிறாரோ என்ற கமல் பேசிய பேச்சுக்கு ரஜினி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

After Spiritual tour Rajini met Media and answered for questions

Breaking: ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு ஆன்மிக அரசியலுக்கு திரும்பிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த இரண்டு வாரங்களாக இமயமலை பகுதியில் தனது ஆன்மிக பயணத்தை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.

அங்குள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று தியானம் செய்து வந்தார்.

அங்கு அவர் சென்ற பின் பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானது.

அவர் குதிரை சவாரி செய்வது போன்ற படங்களும் வெளியானது.

அதுபோன்ற பகுதிகளில் வாகனம் செல்ல முடியாது என்பதாலேயே குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம்.

இதனையும் கிண்டல் செய்து பலர் மீம்ஸ்கள் கிரியேட் செய்து பதிவிட்டனர்.

மேலும் அங்கு சென்றபின் அரசியல் கேள்விக்கு பதிலளிக்காத ரஜினியை கிண்டல் செய்தும் வந்தனர்.

தான் கட்சி ஆரம்பித்து அறிவித்த பின் முழு நேர அரசியலில் 100% ஈடுபடுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு சற்றுமுன் சென்னை திரும்பினார்.

எனவே இனி அவரின் ஆன்மிக அரசியல் குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajinikanth returned from his spiritual tour of Himalayas

தமிழ் சினிமா ஸ்டிரைக்: ஹீரோவான அஜித்; வில்லனாகும் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலித்து வருகிறது.

இதனை கண்டித்து கடந்த 3 வாரங்களாக (மார்ச் 1 முதல்) புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது.

மேலும் மார்ச் 16ஆம் தேதிக்கு பின்னர் தமிழ் படத்தின் சூட்டிங்கை உள்நாட்டிலும், மார்ச் 23ஆம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டிலும் நடத்த கூடாது எனவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டது.

இதனால் சென்னை தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியை விதித்துள்ள தமிழக அரசு அந்த வரியை நீக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி வருகிறது தமிழ் திரையுலகம்.

இதனால் 20 நாட்களாக ஒட்டு மொத்த திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது.

இதனிடையில் அஜித் நடிக்கவுள்ள விஸ்வாசம் படத்தை தயாரிக்கும் சத்யஜோதி நிறுவனம் சூட்டிங் நடத்த சிறப்பு அனுமதி கேட்டது.

இதனையறிந்த அஜித் அவர்கள் தமிழ் திரையுலகமே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போது சுயநலமாக நாம் செயல்படலாமா? என தன் தயாரிப்பாளரிடம் அஜித் பேசியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இதனை கேள்விப்பட்ட திரையுலகத்தினர் அஜித்தின் நற்குணத்தை பாராட்டினர்.

இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 62 படத்தின் சூட்டிங் சென்னையில் சிறப்பு அனுமதியுடன் நடைபெறுகிறது.

இதற்கு திரையுலகினரே தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த இரண்டு செய்திகளையும் அறிந்த தல, தளபதி ரசிகர்கள், தமிழ் திரையுலகமே ஒன்றாக செயல்படும் இந்த நேரத்தில் முன்னணி நடிகரான விஜய் இப்படி செய்யலாமா? என கேட்டு வருகின்றனர்.

இதை விஜய் கருத்தில் கொண்டு இன்றே சூட்டிங்கை நிறுத்துவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tamil film industry strike Ajith stopped shooting But Vijay shooting happening

Breaking: ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின் கைது; தமிழக அரசுக்கு கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், உத்தரப்பிரதேசத்தில் ரத யாத்திரை தொடங்கியது.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த யாத்திரையைத் தொடங்கிவைத்தார்.

ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, இன்று (20.3.2018) தமிழகம் வந்துள்ளது.

இதனை கண்டித்து திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்.

தமிழக அரசு ரத யாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா?” என கடுமையான பேசினார்.

இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

பின்னர் ஸ்டாலின் தொண்டர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ரத யாத்திரை மற்றும் கைது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 2m2 minutes ago
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

MK Stalin arrested for opposing ratha yatra Kamal condemn TN Govt

Breaking: திரையுலக ஒற்றுமையை கெடுக்கும் விஜய்; ஜேஎஸ்கே கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 16ஆம் தேதிக்கு பின்னர் தமிழ் படத்தின் சூட்டிங்கை உள்நாட்டிலும், மார்ச் 23ஆம் தேதிக்கு பின்னர் வெளிநாட்டிலும் நடத்த கூடாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் சென்னை தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று மார்ச் 20ஆம் தேதி ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பட சூட்டிங் சென்னை, விக்டோரியா மஹாலில் நடைபெற்று வருகிறது. (சென்னை அரசு மருத்துவமனை எதிரில்)

இதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் பங்கு கொள்ளும் தொழிலாளர்கள் பலர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போன்று நாடோடிகள் 2 மற்றும் இதர 2 படங்கள் 2 நாட்களுக்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

சினிமா துறைச் சார்ந்த பல தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வரும் இந்த வேளையில் முன்னணி நடிகரான விஜய் திரையுலக ஒற்றுமையை கெடுக்கும் வகையில் நடந்து கொள்ளலாமா? என தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் மற்றும் டைரக்டர் வெங்கடேஷ் ஆகியோர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் 62 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

J Satish Kumar‏Verified account @JSKfilmcorp 6m 6 minutes ago
Actor #Vijay ‘s shooting is happening now at Victoria Hall. Where is our unity? How can our council give spl permission? I strongly oppose this decision. Don’t split up.

During Cinema Strike Vijay 62 shooting happening in Chennai

More Articles
Follows