தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் படம் ரிலீசாகவுள்ளது.
ஆனால் சிம்புவின் மற்றொரு படமான ’மஹா’ படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.
ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.
இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தனக்கு தெரியாமலேயே முடிந்துவிட்டதும் என்றும், தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் வழக்கு தொடுத்திருந்தார்.
இதனால் பட ரிலீசுக்கு கோர்ட் தடை விதித்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி ’மஹா’ படத்தை திரையிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ’மஹா’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
STR – Hansika’s Mahaa to release in OTT