தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல்.
இதனையடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ‘ரா.. ரா.. ராஜசேகர்’ என்ற படத்தை இயக்கினார்.
ஆனால் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் அந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் விஜய் மில்டனின் ’ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார் பாலாஜி சக்திவேல்.
யார் இவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கடுகு படப்புகழ் நாயகி சுபிக்ஷா நாயகியாக நடிக்கிறாராம்.
இப்படத்திற்கு மாநகரம் படப்புகழ் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார்.
Subiksha teams up with Balaji Mohan and Vijay Milton Project