தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘அண்ணாத்த’ படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் ரஜினி என கூறப்பட்டது.
அதன்பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கலாம் எனவும் தகவல் பரவியது.
தற்போது அந்த படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் எனவும் இந்த படம் பாலம் கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறாக உருவாகவுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
பாலம் கல்யாண சுந்தரம் தான் வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தையும் தான் வாழும்போதே ஏழை மக்களுக்கு எழுதி கொடுத்தவர் என்று அனைவரும் அறிந்த ஒன்றே.
1999ஆம் ஆண்டில் காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
தான் வாழும் போதே தன் சொத்துக்களை எழுதி தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும் என மேடையிலேயே அறிவித்தார் ரஜினிகாந்த்.
எனக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆனால் தந்தை இல்லை. எனவே நீங்கள் எனக்குத் தந்தையாக வேண்டும் என அன்புக்கோள் விடுத்து போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாணசுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.
ஆனால் எல்லாம் சுதந்திரமும் சகல வசதிகள் கிடைத்தாலும் ஒரு சிறையில் இருப்பதை போல் உணர்கிறேன் என ரஜினி வீட்டை விட்டு சென்றார் பாலம் கல்யாண சுந்தரம்.
இந்த நிலையில் பாலம் கலியாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.
பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை வரலாறு தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படமாக வெளியாக உள்ளது.
இதில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அன்பு பாலம் என்ற புத்தகத்தில் பாலம் கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super Star Rajinikanth to act in Paalam Kalyana Sundaram biopic
