தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா

தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association newsதமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழாவானது, சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel – ல் நடைபெற்றது.

தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக தோற்றுவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் திரு. அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார், தமிழக அரசின் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன் அவர்களும், மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ அவர்களும் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர்.

சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் அவர்களும் , சங்க பொது செயலாளராக திரு. R .பன்னீர் செல்வம் அவர்களும் பொருளாளராக திரு.D.C. இளங்கோவன் அவர்களும் மற்றும் பல நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அறிவித்து அமைச்சர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான நல்லரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,

மேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது, விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association news

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association news

தாணு-தனுஷ்-வெற்றிமாறன் இணையும் *அசுரன்* பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தாணு-தனுஷ்-வெற்றிமாறன் இணையும் *அசுரன்* பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Vetrimaaran Thanu team up for Asuran first look releasedதனுஷ், வெற்றிமாறன் இணைந்த வடசென்னை படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் 2-வது பாகம் வெளிவருவதற்கு முன்னதாக நடிகர் தனுஷை வைத்து மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘அசுரன்’ என்று தலைப்பிட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை வெளியிட்ட தனுஷ் கூறியதாவது…

“மாரி 2 படத்தின் வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் எனது அடுத்த படமான ‘அசுரன்’அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை வெற்றி மாறன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்” என்று கூறியுள்ளார்

இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Dhanush Vetrimaaran Thanu team up for Asuran first look released

தீர்ப்பு கூறிய வழக்கையே படமாக எடுத்த நீதிபதி; பார்க்க காத்திருக்கும் பாக்யராஜ்

தீர்ப்பு கூறிய வழக்கையே படமாக எடுத்த நீதிபதி; பார்க்க காத்திருக்கும் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgementஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கும் படம் வேதமானவன்.

மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொள்கிறார்.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.

தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.

இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

வேதமானவன் படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குனர் கே. பாக்யராஜ் பேசுகையில்,

“நீதிபதியாய் இருந்து அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு, இலக்கியத் துறையிலும் அதிக ஈடுபாடோடு சுமார் 20 புத்தகங்கள் எழுதியுள்ளார் புகழேந்தி.

அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இப்போது திரை உலகிலும் நுழைந்துள்ளார்.

பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் திரைப்படம் எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்திய அவரது குடும்பம் கிரேட்!

நீதிபதி புகழேந்தியிடம் நல்ல ரசனை உள்ளது. குற்றம் தொடர்பான பின்னணி கொண்ட இந்த கதைக்கு ‘வேதமானவன்’ என்று ரசனையான டைட்டிலை வைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கும் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் புகழேந்தி ஐயாவை மனமார பாராட்டுகிறேன்” என பேசினார்.

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgement

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgement

மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்.; வைரமுத்து எச்சரிக்கை

மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்.; வைரமுத்து எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If human destroys Nature Then Nature will destroy us says Lyricist Vairamuthu‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

இயற்கை என்ற பெரும்பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே இணைத்தவர் என்று கபிலரைக் கருதலாம்.
இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப் பொருளன்று முதற்பொருள் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.

இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காடு காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை.

ஆனால் அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற்கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.

இயற்கைக்கு எதிரான மனிதனின் யுத்தம்தான் உலகத்தை வெப்பமயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது.

புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்திற்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்துவிடும்; பருவங்கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந்தால் மலைவளம் குன்றும்; மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்க வேண்டியிருக்கும்.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது. கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்; புல்லை வணங்குவான்.

கபிலர் பாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.

தமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது;

சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.

இளைஞர்களே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள்.

பாரியின் மரணத்திற்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலர் பெருமான் வாழ்வில் கற்றுக் கொள்ளுங்கள்.

If human destroys Nature Then Nature will destroy us says Lyricist Vairamuthu

ரஜினியின் *பேட்ட* படத்துடன் இணையும் லாரன்ஸின் *காஞ்சனா3*

ரஜினியின் *பேட்ட* படத்துடன் இணையும் லாரன்ஸின் *காஞ்சனா3*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanchana3 motion poster will be released along with Petta releaseலாரன்ஸின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘முனி’.

இதன் இரண்டாம் பாகம் காஞ்சனா என்ற பெயரில் வெளியானது.

இந்த படமும் வெற்றிப் பெற இதனையடுத்து காஞ்சனா2 என்ற படத்தை எடுத்தார்.

தற்போது இந்தப் படங்களின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது.

தன் ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே இப்படத்தை தயாரிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர்.

மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசைக்காக பாடலாசிரியர் மதன் கார்க்கியின் டூபாடூ நிறுவனத்துடன் லாரன்ஸ் கை கோர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை பேட்ட படத்துடன் இணைத்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

காஞ்சனா 3 (முனி 4) படம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kanchana3 motion poster will be released along with Petta release

ரஜினி பெயரில் புது டிவி சேனல்; ரங்கராஜ் பாண்டே இணைகிறாரா?

ரஜினி பெயரில் புது டிவி சேனல்; ரங்கராஜ் பாண்டே இணைகிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Journalist Rangaraj Pandey may join in Rajini TV new channelநடிகா் ரஜினிகாந்த் விரைவில் ஒரு தனிக்கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் கட்சி தொடங்கப்படவில்லை என்றாலும் கட்சிக்கான 60 சதவீத பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக ரஜினிகாந்தே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் புதியதாக ஒரு டிவி சேனல் தொடங்கவுள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து ரஜினிகாந்த் கூறியதாவது…

என் பெயரில் டிவி சேனல் யாரும் தொடங்கிவிட கூடாது என்பதற்காக, நாங்கள் அந்த பெயரில் பதிவு செய்து வைத்துள்ளோம். என்றார்.

மேலும் ரஜினி டிவி, தலைவர் டிவி, சூப்பர் ஸ்டார் டிவி என்ற ஏதாவது ஒரு பெயரில் இது தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அண்மையில் தந்தி டிவி.யில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே இதில் செய்தி ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

மேலும் ரங்கராஜ் பாண்டே அவர்கள் ரஜினி ரசிகர் என்பதால் இது நடக்கலாம் எனவும் தெரிகிறது.

Journalist Rangaraj Pandey may join in Rajini TV new channel

More Articles
Follows