தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் படப்பிடிப்பு நாளை (டிசம்பர் 11) சென்னையில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இன்று டிசம்பர் 10 இப்படத்தின் நாயகன் சிவா தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
சிவா பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழ்படம் 2.O’ படக்குழு, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இதில் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது.
அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த டிசைன் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இப்படத்தின் நாயகனாக சிவா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அவர்களோடு சதீஷ், திஷா பாண்டே, சந்தான பாரதி, கலைராணி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், OAK சுந்தர், அஜய் ரத்னம் மற்றும் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்கள்.
‘தமிழ்படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
tamilpadam 2point0 news updates