தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’வாக நடித்த ஹூமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்பட முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாறி’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று யூடிப்பில் சாதனை படைத்து வருகிறது.
விரைவில் 2வது சிங்கிள் பாடல் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.
இந்த படத்தில் இடம்பெறும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என இனிமையாக தெரிவிக்கின்றனர் படக்குழுவினர்.
வருகின்ற (செப் 10ல்) விநாயகர் சதுர்த்திக்கு வலிமை படத்தின் டீசர் வெளியாகும் என தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து ரிலீஸ் தேதியை அறிவிக்க முடிவு செய்துவிட்டார்களாம்.
இந்த நிலையில் ஒரு வாரமாக ரஷ்யாவில் நடைபெற்று வந்த வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் மொத்தமாக முடித்துள்ளனர்.
அங்கே கெத்தாக அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் எனலாம்.
Thala Ajith looks handsome at Russia shooting spot