தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புகழ்பெற்ற பிளேபாய் பத்திரிகையின் புகைப்பட கலைஞரும் ஓவியருமான எல்.ராமச்சந்திரன் மற்றும் சுனிதா தம்பதியருக்கு தரன்சியா என்றொரு மகளும் யானிஷ் என்றொரு மகனும் உள்ளனர்.
இதில் தரன்சியா சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே தன் தந்தையை போல ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகம். அதன்படி தன் 7 வயதில் இருந்தே ஓவியங்களை வரைந்து வருகிறார்.
எவரும் சிந்திக்காத வகையில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்து வரும் இவர் குப்பையில் வீசப்படும் பாட்டில்களை கொண்டு அதில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து இருக்கிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக பல்வேறு பிரபலங்கள் அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தன் பாட்டில் ஓவியங்களை விற்று அதை கொரோனா நிவாரண நிதியாக வழங்க முடிவெடுத்துள்ளார் தரன்சியா.
அதன்படி தன் யோசனையை இவரின் தந்தை ராம் மற்றும் தாய் சுனிதாவிடம் சொல்ல இருவரும் பாட்டில் ஓவியங்களை விளம்பரப்படுத்தி நிதி திரட்ட ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி இவர்களின் குடும்ப நண்பரும் நடிகருமான பார்த்திபன் ரூ. 10 ஆயிரத்துக்கு ஓவியங்களை வாங்கியுள்ளார்.
மேலும் சிலரும் வண்ண வண்ண பாட்டில் ஓவியங்களை வாங்கியுள்ளனர்.
ஓவியங்கள் மூலம் கிடைத்த தொகை ரூ. 25 ஆயிரத்தை தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சமூக விலகலை கடைப்பிடித்து வழங்கியுள்ளார் தரன்சியா. அப்போது இவரின் தந்தை எல் ராமச்சந்திரன் உடனிருந்தார்.
Tharansia sold her Bottle Art and donated for Corona relief fund
கூடுதல் தகவல்…
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உலக அமைதியை வலியுறுத்தி முக ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி கடந்தாண்டு நடந்தது.
அதில் 4 மணி நேரத்தில் 950 மாணவ, மாணவியர்களின் முகங்களில் பல்வேறு வண்ணங்களில் விதவிதமான ஓவியங்கள் வரைந்து தரன்சியா நிறுவனத்தினர் சாதனை படைத்தனர்.
இதில் மாணவி தரன்சியா கலந்து கொண்டார் என்பதும் இந்த நிகழ்வுக்கு கின்னஸ் சாதனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
Tharansia sold her Bottle Art and donated for Corona relief fund