தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் தயாரிப்பில் உருவாகும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் நானா படேகர், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சுகன்யா, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இதில் ரஜினியின் மனைவியாக ஈஸ்வரி ராவ் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் சமுத்திரக்கனியின் கேரக்டர் குறித்த தகவல் வந்துள்ளது.
இவர் ஈஸ்வரிராவின் சகோதரனாக நடிக்கிறாராம்.
எனவே ரஜினிக்கு சமுத்திரக்கனி மச்சான் என தெரியவந்துள்ளது.
The relationship between Rajini and Samuthirakani in Kaala