தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
18 வருடங்களுக்கு முன்பு பாலா இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்து தன் திறமையை திரையுலகிற்கு அறிய செய்தவர் சூர்யா.
அதன்பின் பாலா இயக்கிய அவன் இவன் படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் 41வது படத்தை இயக்கவுள்ளார் பாலா. இந்த படத்தை ஜோதிகா, சூர்யா இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் அறிவிப்பை சூர்யாவே வெளியிட்டுள்ளார். ‛‛எனது வழிகாட்டியான அண்ணன் பாலா ஆக்சன் சொல்ல காத்திருந்தேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. உங்கள் வாழ்த்துக்கள் தேவை” என பதிவிட்டுள்ளார் சூர்யா.
கன்னியாகுமரியில் இன்று இப்படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷூம், ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியமும் கலை இயக்குனராக மாயாண்டியும் எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணிபுரிய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
The shooting of Suriya 41 begins with a pooja at Kanyakumari