தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.
இதனையடுத்து இந்த வைரஸ் பரவலைத் தடுக்க செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதாவது வரும் ஜீன் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அந்த 4 மாவட்டங்களிலும் பொதுமுடக்கம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதகவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை அட்டைதாரர்களின் வீடு தேடி வந்து 22 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாக என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
TN 4 districts shut down Rs 1000 relief fund for Ration card