தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
குறிப்பாக அங்கு அகமதாபாத், மணிநகர் பகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.
இதனால் தமிழ் பள்ளிகள் & தமிழ்ச் சங்கங்கள் செயல்படுகின்றன.
சுமார் 81 ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளதாம்.
இந்த பள்ளியில் படித்த பலரும் உயர் பதவியில் உள்ளனர்.
தற்போது வகுப்புகளுக்கு போதுமான மாணவர்கள் சேர்க்கை இல்லை என கூறி தமிழ்பள்ளியை மூடுவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.
எனவே எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில் குஜராத் முதலமைச்சர் விஜர் ரூபானிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அகமதாபாத்தில் செயல்பட்டுவரும் தமிழ்பள்ளி மூடப்பட்டதை கேட்டு வேதனை அடைந்தேன்.
குஜராத்தில் உள்ள தமிழர்களுக்கு இந்த பள்ளி முகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது.
தற்போது மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி பள்ளியை மூடியுள்ளது அங்குள்ள தமிழ் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ் வரலாற்று சிறப்புமிக்க மொழி, அங்குள்ள தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
வரும் காலத்தில் குஜராத்தில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களும் தமிழ் மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனவே தற்போது மணிநகரில் மூடப்பட்டுள்ள தமிழ்பள்ளியை திறக்க குஜராத் அரசு ஆணையிட வேண்டும்.
அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கான அனைத்து செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராகவுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
TN Cm writes letter to Gujarat Cm