தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதிமுதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சில வணிக நிறுவனத்திற்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில வணிகங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீடிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற விவரங்கள் இதோ…
பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு
திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது
கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும்
அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு.
புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கு தடை தொடரும்
உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி.
மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிப்பு.
இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?
பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை தொடரும்
வாரச்சந்தைகள் மட்டும் உரிய வழிகாட்டு நெறிகளை பின்பற்றி இயங்க அனுமதி
அரசு, தனியார் நிறுவனங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுரை.
சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி
TN extends lockdown till october 31st