தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும்போதே சில தளர்வுகளுடன் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது.
சமுமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை.. கொரோன தொற்று அதிகரிக்கும் உள்ளிட்ட ஆதாரங்களுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவசர வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுத்தது. ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என உத்தரவிட்டது.
ஆனால் மதுபானங்களை ஆன்லைனில் விற்கலாம் என உத்தரவிட்டது.
இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டை கண்டித்து நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.
என பதிவிட்டுள்ளார்.
TN Govt moves Supreme Court for opening Tasmac Kamal slams Govt