தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 16-ம் தேதியே தமிழகம் மற்றும் புதுச்சேரியல் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.
கிட்டதட்ட 4 மாதங்களுக்கு பின்னர் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் இருந்தாலும் சினிமா தியேட்டர்கள் மற்றும் சினிமா சூட்டிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே சில தயாரிப்பாளர்கள் ஆன்லைன் ஓடிடி தளத்தில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் சகஜமாக திரும்பும் நிலை வந்த பின்னர்தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பதிலால் திரையுலகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
TN Minister talks about Cinema theaters reopen after lock down