தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றனர்.
இந்த குழுவானது நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது கூடி விவாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் அதிமுக ஆட்சியின் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இன்று மே 22 காலையில் முதல்வரின் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும்,
கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 13 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில் மே 24 முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
அதன் விவரம்…
மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை – தமிழக அரசு.
இன்றும் மே 22-23 நாளையும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி.
பொதுமக்கள் நலன் கருதி இன்று (22.5.21) இரவு 9 மணி வரையிலும், நாளை ஞாயிறு ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி.
முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி.
பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி.
காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும். அடுத்த ஒரு வாரம் மளிகை, காய்கறி கடைகள் செயல்படாது.
#TNLockdown
#BREAKING: Total #Lockdown without any relaxation to be enforced in #TamilNadu for a week from Monday. All Shops likely to be kept open from 6am to 9pm tomorrow (May 23 SUNDAY) for people to replenish their supplies for the week.