தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல டிவி நடிகையான சபர்ணா, சில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென அவர் இறந்து வீட்டில் கிடந்ததாக செய்திகள் வந்தன.
இந்த மரண செய்தி டிவி நட்சத்திரங்களை அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் இருந்துள்ளதால், தற்கொலை செய்துக் கொண்டார் என ஒரு பக்கம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால், சபர்ணா இயற்கையிலேயே தைரியமானவர்.
நாங்கள் சோர்வாக இருந்தால் எங்களுக்கு தைரியம் கொடுப்பவர் அவர் என அவருடன் பழகிய நண்பர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
எனவே சபர்ணாவின் மரணத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.
இவருக்கு சுகுணா என்ற மற்றொரு பெயரும் உண்டு.