தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
விரைவில் இப்பட போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் திருமணம் பற்றிய ஒரு பாடலை இயக்குனரே எழுதியிருக்கிறாராம்.
இதன் வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கை அனுபவத்தை பிரதிபலிப்பது போல உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா சம்பந்தப்பட்ட நினைவுகளின் தாக்கம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.